வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் காற்றுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும். திரிகோணமலை-யாழ்ப்பாணம் (ஜாஃப்னா) இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு இலங்கை கடற்கரைக்கு அப்பால், திருகோணமலைக்கு கிழக்கு – வடகிழக்கு சுமார் 50 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் மட்டக்களப்பிற்கு வடக்கே 120 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவிலும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்று குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று பிற்பகல் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே, வடக்கு இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: