‘பாஜவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ள விஜய்யை முஸ்லிம்கள் அறிவார்கள்’ தவ்ஹீத் ஜமாத்

நெல்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் அப்துல் கரீம் நேற்று நெல்லையில் அளித்த பேட்டி; பாஜ ஆட்சிக்கு வந்ததால் மத பாகுபாடு அதிகரித்து வருகிறது. இந்த மத பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும்.  தமிழகத்தில் பாஜ கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் பாஜ கூட்டணி அரசு அமையக்கூடாது என்பதில் தமிழக முஸ்லிம்கள் தீர்மானமாக உள்ளனர். நடிகர் விஜய், பாஜவுடன் மறைமுகமாக கூட்டணியில் இருந்து வருகிறார். அவரையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: