வேப்பூர்: அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் நேற்று கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில் நடந்த, தேமுதிக மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மாநாட்டு திடலில் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
