திண்டுக்கல்: திண்டுக்கல் பெரியமல்லணம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெத்தன் மகன் முருகன் (19). இவரது வீட்டில் கடந்த 3 தினங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (61), இவரது மகன் காளிதாஸ் (33) மற்றும் பெத்துராஜ் (30), ஆகிய மூவரும் தவெக கொடியை கட்டியதாக கூறப்படுகிறது. வீட்டில் கட்டப்பட்ட தவெக கொடியை நேற்று முன்தினம் முருகன் கழற்றியுள்ளார்.
இதனையறிந்த பாண்டீஸ்வரி மற்றும் காளிதாஸ் இருவரும் முருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘கட்சிக்கொடியை ஏன் அவிழ்த்தாய்’ என மிரட்டியுள்ளனர். மேலும் சாதி பெயரை சொல்லி அவதுறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. முருகன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தாடிக்கொம்பு போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பாண்டீஸ்வரி, பெத்துராஜ் மற்றும் காளிதாஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
