புதுச்சேரி: புதுச்சேரி பாஜ அமைச்சரும், தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆதரவாளருமான ஜான்குமார், விஜய்க்கு ஆதரவாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அதில், விஜய். கட்சி தொடங்கி விட்டார் என்பதற்காக படத்தை ரிலீஸ் பண்ணாமல் இருப்பது தப்பு, இதை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்.
அவர் படத்தை ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பின்படி விட்டுவிட வேண்டும். இதற்காக மக்களை, ரசிகர்களை வேதனைப்படுத்தக் கூடாது. என்னை பொறுத்தவரை இதை சினிமாவாக பாருங்க, படத்தை ரிலீஸ் பண்ணுங்க, நன்றி, வணக்கம் என தெரிவித்துள்ளார்.
