பாம்பனில் பலத்த சூறைக்காற்று ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி

ராமேஸ்வரம்: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த சூறைக்காற்று வீச துவங்கியது. பாம்பனில் அதிகாலையில் 60 கி.மீ வேகத்தில் வீசிய காற்று பிற்பகலில் 65 கிமீ வேகத்தை தாண்டியது. பலத்த சூறைக்காற்று காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் அதிகாலை முதல் ரெட் சிக்னல் எச்சரிக்கை விடப்பட்டதால் பாலத்தை ரயில்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில், அக்காள்மடம் பகுதியில் நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டது. அயோத்தியா – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை போட் மெயில், மதுரை பயணிகள் ரயில்கள் அடுத்தடுத்து மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

காலை 11.45க்கு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயில் ராமேஸ்வரம் – உச்சிப்புளி இடையே ரத்து செய்யப்பட்டது. அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை பயணிகள் ரயில் அதிகாலையில் அக்காள்மடம் பகுதியில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ஒரு கி.மீ தூரம் உடமைகளுடன் தண்டவாளத்தில் நடந்தே சென்றனர்.

Related Stories: