நடைபயிற்சி செய்த ஏட்டு டெம்போ மோதி பலி

நாகர்கோவில்: நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் யூஜின் கிராஸ் (49). குமரி மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டு. கடந்த 4ம்தேதி காலை 6.15 மணியளவில் இவர் வேப்பமூடு – கோர்ட் ரோட்டில், நடைபயிற்சியில் இருந்தார். அப்போது டெம்போ மோதி இழுத்து செல்லப்பட்டு கால் சிதைந்து படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யூஜின்கிராஸ் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

Related Stories: