சென்னை: தமிழகத்தில் உதவி கமிஷனர்கள் மற்றும் டிஎஸ்பி என 88 பேர் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிஜிபி வெங்கடராமன் வெளியிட்ட உத்தரவு: சென்னை, பெருநகர காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த பாஸ்கர், விருகம்பாக்கம் உதவி கமிஷனராகவும், ராயபுரம், உதவி கமிஷனர் ராஜபால், சென்னை பெருநகர காவல் பிரிவின் நுண்ணறிவுப் பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த காயத்ரி, வேப்பேரி உதவி கமிஷனராகவும், நுண்ணறிவுப் பிரிவில் இருந்த சங்கரநாராயணன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், பரங்கிமலை சரகம் உதவி கமிஷனர் முரளி, செம்பியம் சரக உதவி கமிஷனராகவும், மீனம்பாக்கம் உதவி ஆணையர் முகேஷ் ஜெயக்குமார், கிண்டி சரக உதவி கமிஷனராகவும், தரமணி உதவி கமிஷனர் சங்கு, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், செம்பியம் உதவி கமிஷனர் பசுபதி, பரங்கிமலை உதவி கமிஷனராகவும், நுண்ணறிவுப் பிரிவில் இருந்த அகமது அப்துல் காதர், சென்னை உயர் நீதிமன்ற சரக உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் சரக உதவி ஆணையர் சீனிவாசன், நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனராகவும், கிண்டி சரக உதவி கமிஷனர் விஜயராமுலு, குற்ற ஆவணக் காப்பக உதவி கமிஷனராகவும், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜன், நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை கிழக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனர் கந்தவேலு, கொளத்தூர் உதவி கமிஷனராகவும், கொளத்தூர் உதவி கமிஷனர் செந்தில்குமார்,
தரமணி உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மணிமேகலை, கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த சிவா, சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும், கோயம்பேடு உதவி கமிஷனராக சரவணன், எம்.கே.பி. நகர் உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த சுரேந்திரன்,
மீனம்பாக்கம் உதவி கமிஷனராகவும், புழல் உதவி கமிஷனராக இருந்த சத்யன், கோயம்பேடு உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பால் ஸ்டீபன், திருமங்கலம் உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த வரதராஜன்,
சென்னை நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கோட்டூர்புரம் உதவி கமிஷனராகவும், மத்திய குற்றப்பிாிவு உதவி கமிஷனர் சிபிகுமார், புழல் உதவி கமிஷனர், சென்னை, கோவை, மதுரையில் டிஎஸ்பிக்கள் உள்பட தமிழகம் முழுவதும் 88 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
