விஜய்க்கு முடக்குவாதம் வந்துடுச்சா? நடிகை கஸ்தூரி கேள்வி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில், பாஜ சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில், பாஜ கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து வள்ளி கும்மி நடனமாடினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தணிக்கை துறை ஐஏஎஸ் அதிகாரி பாலமுரளி தலைமையில் நடைபெறுகிறது. அவர் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது.

விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் விஜய்யின் ரசிகையாக, எல்லா படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறேன். இப்போது அவர் அமைதியாக இருக்கிறார்.

இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பாராலிஸ் (முடக்குவாதம்) வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு, நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்னை வந்தாலும் பேசாமல் இருக்கிறார். இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.

Related Stories: