சிபிஐ விசாரணைக்கு விஜய் சென்றுதான் ஆக வேண்டும்: தமிழிசை பேட்டி

கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த அளித்தார். அப்போது, திரைப்படத்தில் அண்ணா வசனம் இடம்பெற்றால் என்ன பிரச்னை வந்து விடப்போகிறது, ஏன் பயப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு, இந்த கேள்வியை சென்சார் போர்டில் போய் கேளுங்கள், அரசியல் ரீதியான கருத்து இருந்தால் அதை மியூட் செய்வார்கள், நான் படம் பார்த்து விட்டு சரியா என சொல்கிறேன் என்றார்.

தவெக – பாஜ கூட்டணிக்கு வரவேண்டும் என அழைத்தது உங்களது தனிப்பட்ட கருத்து என மாநில தலைவர் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, பாஜவில் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்ல உரிமை உள்ளது. வாக்குகள் பிரிய கூடாது என்பது எனது கருத்து. எதிரணியினர் உதிரியாக இருக்க கூடாது. உறுதியாக இருக்க வேண்டும். விஜய்யை சிபிஐ விசாரணைக்கு அழைத்தால் சட்டப்படி சென்றுதான் ஆக வேண்டும் என்றார்.

Related Stories: