ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு பணிகளை தரமாக விரைந்து முடிக்க அறிவுறுத்தல் கரசமங்கலத்தில் ரூ.29.14 கோடியில் கட்டப்பட்டு வரும்

வேலூர், மே 13: காட்பாடி அடுத்த கரசமங்கலம் கிராமத்தில் இருந்து கழிஞ்சூர் செல்லும் வழியில் ரயில்வே கிராஸிங் உள்ளது. இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடந்து செல்கின்றனர். அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் லத்தேரி, பள்ளத்தூர், பனமடங்கி, பரதராமி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் காட்பாடி வழியாக வந்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் என்பதால் பெரும்பாலும் கழிஞ்சூர் வழியை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த சாலை முக்கிய வாய்ந்த சாலை மாற்றப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கரசமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.29.14 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் உள்தணிக்கையை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையிலான குழுவினர் நேற்று ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விதிமுறைகள் படி முறையாக கட்டுமான பணிகள் நடக்கிறதா? தரமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வேலூர் கோட்ட பொறியாளர் தனசேகரன், வேலூர் திட்டங்கள் கோட்டப்பொறியாளர் சுந்தர், உதவி கோட்ட பொறியாளர், உதவிப் பொறியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். இதேபோல் கமண்டல நாகநதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டம்பாலம் பணியையும் உள்தணிக்கையை கட்டுமான மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

The post ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு பணிகளை தரமாக விரைந்து முடிக்க அறிவுறுத்தல் கரசமங்கலத்தில் ரூ.29.14 கோடியில் கட்டப்பட்டு வரும் appeared first on Dinakaran.

Related Stories: