காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பழுதான புதை வடிகாலால் தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோய் பரவும் என அச்சம், விரைந்து சீரமைக்க கோரிக்கை

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் பழுதான புதை வடிகாலால் தெருவில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் நோய் பரவும் என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, பழுதடைந்த புதை வடிகால் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய ரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் நகரில் உள்ள புதைவடிகால் வாய் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பெரும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள புதை வடிகால்வாய் குழாய்கள் கடந்த 1970 காலகட்டத்தில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, காலாவதியான இந்த குழாய்களை அகற்றிவிட்டு புதிதாக புதைவடிகால் குழாய்களை அமைக்க வேண்டும். இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து முறையாக புது வடிகாலில் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் விடுத்துள்ளார்.

The post காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பழுதான புதை வடிகாலால் தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோய் பரவும் என அச்சம், விரைந்து சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: