உழவர் சந்தையில் இடைத்தரகர்கள் இடையூறு இன்றி விவசாயிகள் விற்பனை செய்ய அடையாள அட்டை வினியோகம்: துணை இயக்குநர் தகவல்

 

காஞ்சிபுரம், மே 10: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த விளை பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய அடையாள அட்டைகளை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தில் பெற்று பயன்பெறலாம் என வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் ஜீவராணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் ஜீவராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்ட காய்கறி, கீரை மற்றும் பழ விவசாயிகள், தாங்கள் விளைவித்த விளைபொருட்களை நேரடியாக எவ்வித கட்டணமும் இன்றி காஞ்சிபுரம், படப்பை, சுங்குவார்சத்திரம் மற்றும் குன்றத்தூர் உழவர் சந்தையில் நியாயமான நல்ல விலைக்கு இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்ய புதிய அடையாள அட்டைகள் பெற்று பயன்பெற கேட்டுக்கொண்டார்.

இந்த, அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. பழைய அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் புதிய அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்ளவும், மேலும் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்வதில், ஏதேனும் இடர்பாடுகள் இருப்பினும் எங்கள் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post உழவர் சந்தையில் இடைத்தரகர்கள் இடையூறு இன்றி விவசாயிகள் விற்பனை செய்ய அடையாள அட்டை வினியோகம்: துணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: