மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (25). அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் அப்பு என்கின்ற உதயா (24), திவாகர் (23) ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு தங்கள் கிராம சமுதாயக்கூடம் அருகே நள்ளிரவு ஒரு மணி அளவில் மது அருந்திகொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திவாகர், உதயா இருவரும் சேர்ந்து லோகேஷை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் துடிதுடித்து அங்கேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது முன் விரோதத்தில் ஏற்பட்ட கொலையா அல்லது மது போதையால் ஏற்பட்ட கொலையா என மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இரும்பு ராடால் அடித்து வாலிபர் படுகொலை appeared first on Dinakaran.