செங்கல்பட்டு, மே 5: செங்கல்பட்டில் உள்ள ஸ்வீட் கடை மாடியில் வைத்திருந்த இன்வெட்டரில் மின் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் ஸ்வீட் ஸ்டால் ஒன்று உள்ளது. இது இரண்டு தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் தரை தளத்தில் ஸ்வீட் ஸ்டாலும் முதல் தளத்தில் பேக்கரிக்கு தேவையான ஸ்வீட், காரம் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது தளத்தில் அங்கு வேலை செய்து வரும் ஊழியர்கள் தங்கியுள்ளனர். மொட்டை மாடியில் இன்வெர்ட்டர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு எப்போதும் போல ஸ்வீட் கடை மூடியதும் ஊழியர்கள் உறங்குவதற்கு சென்று விட்டனர். இந்நிலையில் காலை நேரத்தில் மொட்டை மாடியில் புகை வருவதாக அக்கம்பக்கத்து கடைகாரர்கள் ஸ்வீட் கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். மேலே சென்று பார்த்தபோது மொட்டை மாடியில் வைத்திருந்த இன்வெர்ட்டரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது தெரியவந்தது. இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையம் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்புத்துறை நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட தீயினால் மொட்டை மாடியில் சிமெண்ட் தரைகள் வெடிப்பு ஏற்ப்பட்டு பெயர்ந்தது. சரியான நேரத்தில் தெரிந்ததால் மிகவும் நெருக்கமான கட்டிடங்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் உள்ள இந்த பகுதியில் பெரிய தீவிபத்து ஏற்ப்படாமல் சேதம் ஏதும் ஏற்ப்படாமல் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post செங்கல்பட்டில் பரபரப்பு ஸ்வீட் கடை மாடியில் திடீர் தீ appeared first on Dinakaran.