காஞ்சிபுரம், ஏப். 12: காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு வட்டத் தலைவர் முகமது, ஜமாத் தலைவர் லியாகத் ஷெரிப் சாகிப் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மோடி அரசு மத்திய வக்பு சட்டத்தை திரும்பபெறு, வாங்காதே பழிவாங்காதே இஸ்லாமியர்களை பழிவாங்காதே, மதவெறுப்பை தூண்டாத எதிர்ப்போம் எதிர்ப்போம் இறுதிவரை எதிர்ப்போம் என 150 முஸ்லிம்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி அருகேயுள்ள சுன்னத் ஜமாத் ஜும்மா பள்ளிவாசல் என்னும் ஷேக் கைருல்லாஹ் மஸ்ஜித் ஜமாத் தொழுகைக்கு பிறகு காஞ்சிபுரம் தேரடி பள்ளிவாசல் வெளியே மஸ்ஜித் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் அப்துல் குத்தூஸ் தலைமை தாங்கினார். இந்த கண்டன முழக்க கூட்டத்தில் மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி முஹம்மத் காலித் காஷிபி கண்டித்து பேசினார். உடன் சின்ன காஞ்சிபுரம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் 300க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.
The post வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.