ரவுடி வசூல் ராஜா கொலையில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

காஞ்சிபுரம், ஏப்.11: ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகளை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த ராமன்(எ) பரத்(20), சிவா(19) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ராமன், சிவா ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்பி சண்முகம், கலெக்டர் கலைச்செல்வி மோகனுக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில், ரவுடிகள் ராமன், சிவா ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று உத்தரவிட்டார்.  இதையடுத்து, சரித்திர பதிவேடு ரவுடிகளான ராமன், சிவா ஆகியோரை போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ரவுடி வசூல் ராஜா கொலையில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: