துரைப்பாக்கம், ஏப்.12: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பாக கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (12ம் தேதி) பைக்கில் செல்வோர் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இதையொட்டி, காலை 7 மணி முதல் 10 மணி வரையில் 3 மணி நேரத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை அக்கரை முதல் கோவளம் வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் கிழக்கு கடற்கரை சாலை சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய வாகனங்கள் அக்கரை சந்திப்பில் வலதுபுறம் கலைஞர் கருணாநிதி சாலை வழியாக சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் சென்று இடதுபுறம் திரும்பி கோவளம் சென்றடைந்து. கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி சென்றடைலாம்.
அதேபோல் மாமல்லபுரத்தில் இருந்து திருவான்மியூர் வரும் வாகனங்கள் கோவளம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம் ராஜிவ்காந்தி சாலை வந்தடைந்து, சோழிங்கநல்லூர் சிக்னல் வலதுபுறம் கலைஞர் கருணாநிதி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
The post ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி இசிஆரில் இன்று போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.