கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில், பிளஸ்2 படித்து வரும் மாணவி ஒருவர், கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை சாலையில் உள்ள அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், நேற்று முன்தினம் நடந்த உயிரியல் தேர்வை எழுதினார். அப்போது, தேர்வறையின் மேற்பார்வையாளராக, வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் (44) என்பவர் மாணவியிடம், திடீரென பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதே போல், அதே அறையில் தேர்வெழுதிய அப்பள்ளி மாணவி ஒருவரும், தன்னிடம் ஆசிரியர் ரமேஷ் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.
The post தேர்வு அறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது appeared first on Dinakaran.