இந்நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு ெதால்லை செய்ததால், பெங்களூருவில் இருந்து நண்பர்களுக்கு தெரியாமல் வெளியேறிய பிரபு, சென்னை தண்டையார்பேட்டை புது வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்த நண்பர் ஹரி பிரசாத்தின் வீட்டில் வாடகைக்கு தங்கினார். தகவலறிந்த சசிகுமார், உதயகுமார் ஆகியோர் தங்களது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் ஆகியோருடன் தண்டையார்ப்பேட்டையில் உள்ள பிரபுவின் வீட்டிற்குச் சென்றனர். பிரபு மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோரை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி காரில் ஏற்றிக்கொண்டு கிண்டியில் உள்ள ஓட்டலுக்குச் சென்றனர். அங்கு பிரபுவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, மாமனார் ராஜிவ்காந்திக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ராஜிவ்காந்தி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தனது மகன் கடத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். அதன்பேரில், கிண்டி போலீசார் ஓட்டலுக்கு விரைந்து சென்று 4 பேரையும் மடக்கிப் பிடித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் ஆள்கடத்தல் வழக்கு பதிந்து, பெங்களூருவைச் சேர்ந்த சசிகுமார் (26), உதயகுமார் (28), ஜெகதீஷ் (27), புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் (28) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ரூ.40 லட்சம் கடன் திருப்பி தராததால் திருச்சி வாலிபர் காரில் கடத்தல்: பெங்களூரு வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.