இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி அனிதா, நேற்று முன்தினம் இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்த பள்ளிப்பட்டு போலீசார், அனிதாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பகுதியில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை அனிதா காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, அனிதாவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முயற்சித்து வந்ததாக தெரியவந்தது. இதனால் மாணவி தற்கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு பள்ளி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.