போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.21 லட்சம் மோசடி செய்தவர் பிடிபட்டார்

அம்பத்தூர்: வில்லிவாக்கம் பகுதியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.12.21 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த வில்லிவாக்கம், பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (51). இவர் சிட்கோ நகர் மெயின் ரோட்டில் தங்க நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் கடந்த 17ம் தேதி மதியம் அவரது அடகு கடையிலிருந்தபோது, அவருக்கு தெரிந்த நபரான ஏற்கனவே பல தடவை தங்க நகைகள் அடகு வைத்துள்ள பாஸ்கர் (61) என்பவர் கடைக்கு வந்து 38.5 கிராம் எடை கொண்ட 2 தங்க வளையல்கள் மற்றும் விநாயகர் டாலரை அடகு வைத்துள்ளார்.

பின்னர் வெங்கடேசன், சந்தேகத்தின்பேரில், பாஸ்கர் கொடுத்த தங்க நகைகளை பரிசோதனை செய்தபோது, அது போலி நகைகள் என தெரியவந்தது. உடனே, வெங்கடேசன், பாஸ்கரை பிடித்து வைத்துக்கொண்டு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாஸ்கர் என்பவர் ஏற்கனவே சுமார் 11 தடவை தங்க நகைகள் என போலியான தங்க நகைகள் அடகு வைத்து, மொத்தம் ரூ.12,21,000 பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. பின்னர் அவரை நேற்று கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 245 கிராம் எடை கொண்ட போலி தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

The post போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.21 லட்சம் மோசடி செய்தவர் பிடிபட்டார் appeared first on Dinakaran.

Related Stories: