காஞ்சிபுரம் ஒன்றியத்தில் இந்திரா குடியிருப்பு வீடுகளை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் இந்திரா குடியிருப்பு வீடுகளை ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் நேரில் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் ஊராட்சிக்கு உட்பட்ட மாந்தாங்கல் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்திரா குடியிருப்பு வீடுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

சீரமைக்க முடியாத நிலையில் உள்ள இக்குடியிருப்பு வீடுகளை, தமிழக முதல்வரின் மறுசீரமைப்பு வீடுகள் திட்டத்தின்படி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழக முதல்வரின் மறுசீரமைப்பு வீடுகள் திட்டத்தின் மூலம் புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பயனாளிகளிடம் உறுதியளித்தார்.

இது, தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா, ஒன்றிய குழு உறுப்பினர் மோகனா இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், துணை தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், துணை செயலாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் ஒன்றியத்தில் இந்திரா குடியிருப்பு வீடுகளை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: