திருப்போரூர், மே 5: தி.மு.க. தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கோவளம் ஊராட்சி தி.மு.க., சார்பில் பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. திருப்போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளரும், ஒன்றியக்குழுத் தலைவருமான இதயவர்மன் தலைமை தாங்கினார்.
கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் வரவேற்றார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் டாஸ் போட்டு கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த கிரிக்கெட் போட்டியில் 75க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றனர்.
இவர்களில் வெற்றி பெறும் 10 அணிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் ஏகாம்பரம், பாளையம், எல்லப்பன், அன்புச்செழியன், அன்பு, கவுரிசங்கர், கருணாகரன், ஜெயபால், வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
The post கோவளம் ஊராட்சி திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.