கரூர், மார்ச் 24: கரூரில் 7 புதிய பேருந்து சேவையை, அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கரூர் பேரூந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மண்டலம் சார்பாக 1, கரூர் 2, அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை கிளைகளில் உள்ள பழைய நகரப் பேருந்துகளுக்கு பதிலாக 7 புதிய பேரூந்துகளை கரூர்-கரிக்காலி, கரூர்-கோட்டநத்தம், கரூர்-மாணிக்கபும், கருர்-கூனம்பட்டி, கரூர்-மூலனூர், குளித்தலை-நெய்தலூர் காலணி, குளித்தலை-தோகைமலை ஆகிய வழித்தடங்களுக்கான பேருந்துகளை கலெக்டர் தங்கவேல் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
The post கரூரில் 7 புதிய பேருந்து சேவை appeared first on Dinakaran.