கரூர், மார்ச் 19: கரூர் மாவட்டம் உள்வீரராக்கியம் பகுதி மக்கள் நலன் கருதி நிழற்குடை அமைத்து தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் வீரராக்கியம் பகுதி உள்ளது. இதற்கு அடுத்ததாக உள்வீரராக்கியம் பகுதி உள்ளது. ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக நீண்ட நாட்களாக சாலையோரம் நின்று அந்த வழியாக வரும் பேரூந்துகளில் ஏறிச் செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த பகுதியில் மக்கள் நலன் கருதி நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனவும் பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த பகுதியின் வழியாக வந்து செல்லும் பேரூந்துகளில் ஏறி இறங்கிச் செல்லும் அனைவரின் நலன் கருதி இந்த பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, மக்கள் நலன் கருதி நிழற்குடை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post உள்வீரராக்கியம் பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.