கரூர், மார்ச் 26: கடந்த 3ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் நேற்றுடன் முடிவுற்ற நிலையில், தேர்வு மையத்தில இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்துக்கொண்டே சந்தோஷத்துடன் வீட்டிற்கு சென்றனர். தமிழகம் முழுதும் கடந்த மார்ச் 3ம் தேதி அன்று பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின. அதில், கருர் மாவட்டம், கரூர், குளித்தலை, க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் 45 மையங்களில் 10,092 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
நேற்றுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்தன. அதையடுத்து, தேர்வு மையங்களில் இருந்து இறுதி தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து, நண்பர்களுடன் ஆடிப்பாடிக்கொண்டே ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துவிட்டு, வீட்டிற்கு சென்றனர். மேலும், பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 27ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 28ம் தேதி அன்று துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு கரூரில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.