கரூர், மார்ச் 26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் மற்றும் அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர்(பொ) பொறியாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பொறியாளர் தேவன்ராஜ் வரவேற்றார். பொருளாளர் பொறியாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறியாளர் பாஸ்கர் பாபு, பொறியாளர் ராமசாமி, பொறியாளர் ராம்சுவாமி, பொறியாளர் ரத்னாசலம், பொறியாளர் பாஸ்கரன், பொறியாளர் ரவிசங்கர், செயற்குழு உறுப்பினர்கள் பொறியாளர்கள் கனகராஜ், பாலகுமார், ரமேஷ், குப்தா, இளமதி, சுரேஷ்குமார், பாலகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிஐஐ சேர்மன் பிரபு, கன்ஸ்ட்ரக்ஷன் லேபர் அசோசியேஷன் உறுப்பினர்கள், ஹேண்ட்லும் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்போர்ட் அசோசியேஷன் பிரசிடென்ட் காளியப்பன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
கட்டிட பணிக்கு தேவையான எம் சேன்ட், பி.சேன்ட், ஜல்லி ஆகிய கட்டுமான பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசு கட்டிட பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்புகளின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
The post கரூர் அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.