கரூர், மார்ச் 19: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 157 ஊராட்சிகளிலும் 23ல் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 23ம்தேதி அன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது விவாதித்தல் சம்பந்தமாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 23ம்தேதி அன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே, கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 23ல் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 157 ஊராட்சிகளிலும் 23ல் கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.