கிருஷ்ணராயபுரம், மார்ச் 23: பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட லட்சுமணம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட லட்சுமணம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமையில் வட்டார வளர்மைய ஆசிரியர் பயிற்றுநர் சந்திரசேகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில், பள்ளியின் ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியை மகாலட்சுமி வாசித்தார். அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர், மாணவ, மாணவிகளின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், சத்துணவு பணியாளர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பத்ரிநாராயணன் நன்றி கூறினார்
The post லட்சுமணம்பட்டி துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.