கரூர், மார்ச் 20: கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பேங்க் சுப்ரமணியன் கரூர் மாவட்ட தலைவராக இருந்த காலத்தில் கரூர் மாவட்டத்தில் கட்சிக்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்து கட்சியின் வளர்ச்சிக்கு பெரும்பாடு பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை அவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அறிவித்து தேசிய அளவில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் பேங்க் சுப்ரமணியனின் 72வது பிறந்த தின விழா கரூரில் நடைபெற்றது. இவ்விழாவில், 72 காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேட்டி, சட்டை, துண்டு வழங்கப்பட்டது. பேங்க் சுப்பிரமணியனுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சேவாதள மாநில செயலாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், ஆர்டிஐ மாநில பொதுச்செயலாளர் ஜி.பி.மனோகரன், நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுப்பன், அரவக்குறிச்சி நகர தலைவர் ரயில் ராஜேந்திரன், ஓபிசி மாநிலத் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் கபில்கான், மாவட்ட துணைத் தலைவர்கள் நாகேஷ்வரன், சின்னையன், செங்கோடன், ஐஎன்டியூசி தலைவர் சந்தனகுமார் மற்றும் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் பேங்க் சுப்ரமணியன், வரும் சட்டமன்றத் தேர்தலில் நமது காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வெற்றிக்கு அனைவரும் பாகுபாடின்றி உழைத்து நமது காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் தங்களது ஊர் பகுதியில் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முன்வர வேண்டும் என்று பேசினார்.
The post காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேங்க் சுப்ரமணியன் 72வது பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.