எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இயந்திர பொறியியல் துறை இறுதியாண்டு மாணவன் சாதனை

வேலாயுதம்பாளையம், மார்ச் 20: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவன் தினோ கெவின், ஐஐடி ரூர்க்கியில் இந்தியா அளவில் நடைபெற்ற ஸ்டிபோ சிஸ்டம்ஸ் ஹேக்கத்தான் 2025-ல் கலந்து கொண்டார். இது பொதுவாக மென்பொருள், ஆப் டெவலப்மெண்ட், வலைத்தளம் உருவாக்கம், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI), ப்ளாக்செயின் (Blockchain) போன்ற பல தொழில்நுட்பத் துறைகளில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில், மொத்தம் ஐந்து சுற்றுகள் நடைபெற்றன. அதில் இறுதி சுற்றில் 1,800 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, ₹50,000 பெருமதியான காசோலையை வென்றார். மாணவர் தினோகெவினுக்கு கல்லூரி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

The post எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இயந்திர பொறியியல் துறை இறுதியாண்டு மாணவன் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: