சென்னை, மார்ச் 22: ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு லாரி மூலம் கடத்த முயன்ற 39 மாடுகளை, அச்சிறுப்பாக்கம் அருகே போலீசார் மீட்டு லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டைனர் லாரி மூலம் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மாடுகள் கடத்தப்படுவதாக கோரக்தல் அமைப்பின் மாநில தலைவர் ரகுராம் ஷர்மா அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அச்சிறுப்பாக்கம் போலீசார் ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் நேற்று அதிகாலை ஈடுபட்டு வந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியில் 33 பசு மாடுகளும் 6 எருமை மாடுகளும் கடத்தி வரபட்டதை கண்டறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது லாரியை சோதனை செய்ததில் மாடுகளுக்கு தண்ணீரோ, தீவனமோ இல்லாமலும் வாகனத்தில் அடைத்து கடத்தப்பட்ட 39 மாடுகளையும் பத்திரமாக மீட்டனர். இந்தக் கடத்தல் சம்பந்தமாக லாரி உரிமையாளர் சம்சுதீன், ஓட்டுநர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் காப்பகமான கோசாலையில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
The post லாரியில் கடத்திய 39 மாடுகள் மீட்பு appeared first on Dinakaran.