பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். இதற்கு முன்னதாகவே முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நான்காண்டு காலத்தில் நெடுஞ்சாலைத்துறை மிகச் சிறப்பான செயல்பாட்டின் மூலமாக பூந்தமல்லி தொகுதியில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக கிட்டத்தட்ட ரூ.200 கோடிக்கு வேலை செய்து 90 சதவீத பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாம் பாலினத்தவரை திருவிழாக்கால கூட்ட நெரிசலில் சாலை போக்குவரத்திற்காக பயன்படுத்த போகிறோம். 50 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. தற்போது நான்கு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அரசு பள்ளிக்கூடங்கள் இன்றைக்கு பெருமையின் அடையாளமாக மாறியுள்ளன. பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் ஓவியங்கள் வரையப்பட்டு ஓவிய கட்டிடங்களாக தனியார் பள்ளிக்கு ஈடாக உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார்.
The post பூந்தமல்லி தொகுதியில் ரூ.200 கோடியில் 90 சதவீதம் நெடுஞ்சாலை பணிகள் நிறைவு: பேரவையில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.