முதல்வரின் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேருக்கு சிகிச்சை: எம்எல்ஏ நலம் விசாரிப்பு

கும்மிடிப்பூண்டி: முதல்வரின் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 5 பேரை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார். தமிழகத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம் ஆகியவற்றால் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த சாணபூத்தூர் ஊராட்சி அலிப்புகுளம் பகுதியைச் சேர்ந்த 5 பேர் உடல்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்னுயிர் காக்கும் 48 திட்டத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை அறிந்த தொகுதி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், உயிரிழப்புகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

The post முதல்வரின் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேருக்கு சிகிச்சை: எம்எல்ஏ நலம் விசாரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: