இதை கேட்ட கலெக்டர் வருகை பதிவேட்டில் இன்று ஒரு நாள் மட்டும்தானே உங்கள் கையெழுத்து உள்ளது. இதற்கு முன்பு நீங்கள் வருகை தந்ததற்கான கையெழுத்து இல்லையே, நான் வந்ததால்தான் நீங்கள் இங்கு வந்தீர்களா என கேட்டார். மேலும், இங்கு இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லை என்றும், நர்சுகள் மட்டுமே பணியில் உள்ளனர் என புகார்கள் வந்துள்ளது என கூறினார். தொடர்ந்து, டாக்டரிடம் மருத்துவமனைக்கு முறையாக வர உத்தரவிட்டார். இதனையடுத்து, நோயாளிகளிடம் சென்று ஏதேனும் குறைகள் உள்ளதா, சரியான நேரத்தில் உணவு கொடுக்கிறார்களா எனவும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சமையல் அறைக்கு சென்று ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை சுவைத்து பார்த்தார். பின்னர், சமையலுக்கு காலாவதியான பொருட்கள் வாங்க கூடாது எனவும், மேலும் நோயாளிகளுக்கு என்ன உணவு வழங்குகிறீர்கள் என்ற பட்டியலை நோயாளிகளின் அறையில் ஒட்ட வேண்டும் எனவும் கூறிவிட்டுச் சென்றார். ஆய்வின்போது, மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், இரவு நேரத்தில் சிகிச்சையளிக்க டாக்டர்கள் இல்லாததால், திருவள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி விடுகிறார்கள். எனவே, இரவு நேரத்தில் நிரந்தரமாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என கூறினர். அப்போது, தாசில்தார் அருள் வளவன் ஆரோக்கியதாஸ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார், செயல் அலுவலர் சதீஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
The post ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு: நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார் appeared first on Dinakaran.