முதல்வர் வருகையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு

திருவள்ளூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மு.பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சீனிவாச பெருமாள், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, ஆவடி காவல் துணை ஆணையர் பாலாஜி, எம்எல்ஏக்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கி அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் அடிக்கல் நாட்டி வைக்கப்படும் திட்டப்பணிகள், முடிவுற்ற திட்ட பணிகள், பயனாளிகள் தேர்வு, பயனாளிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு விழா மேடைக்கு அழைத்து வருவது, பயனாளிகளுக்கான நலத்திட்டங்களை அன்றே வழங்கப்படுவது, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதி அந்தந்த துறை அலுவலர்களுக்கு வழங்கி விழா மேடைக்கு அழைத்து வருவது போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி விழாவை சிறப்பு செய்ய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் நாசர் அறிவுறுத்தினார்.

இதில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் து.சிற்றரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வை.ஜெயக்குமார், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ் ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன் தீபா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர், ஆவின் பொது மேலாளர் நாகராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வஇளவரசி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏ.சேகர், செயற்பொறியாளர் கனகராஜன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், வேளாண்மை இணை இயக்குனர் கலாராணி, வேளாண்மை இயக்குனர் ஜெயந்தி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ், பிரபாகர், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அமலதாஸ், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.பாபு, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயகுமார், கனிமவளத்துறை உதவி இயக்குனர் இளங்கோ, திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த், மாவட்ட முன்னோடி மேலாளர் அருள்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் வருகையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: