அப்போது, முன்பதிவில்லா பெட்டியில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் பயணிகளிடம் விசாரித்தனர். அப்போது, பயணிகள் கூறுகையில், ரயில் பெட்டியில் கூட்டம் அலைமோதியது. நீண்டநேரம் நின்றபடி பயணம் செய்த நிலையில், சோர்வு ஏற்பட்டு தூக்க கலக்கத்தில் தவறுதலாக அபாயச் சங்கிலியை இழுத்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் பயணிகளை எச்சரித்துவிட்டுச் சென்றனர். அனைத்தொடர்ந்து, ரயில் கொருக்குப்பேட்டையில் இருந்து புறப்பட்டு வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக பெங்களூரு நோக்கிச் சென்றது.
The post அபாய சங்கிலியை தவறுதலாக இழுத்ததால் விரைவு ரயில் பாதியில் நிறுத்தம் appeared first on Dinakaran.