நாகை, மார்ச் 20: நாகை சர் ஐசக் நியூட்டன் செவிலியர் கல்லூரி முதல் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. விழாவை கல்லூரி செயலர் த.மகேஸ்வரன் தொடங்கி வைத்தார். முதல்வர் கோ.ராஜி வரவேற்புரை நிகழ்த்தினார். சர் ஐசக் நியூட்டன் கல்விக்குழுமத்தின் இயக்குனர் சங்கர் சிறப்பு விருந்தினரை அறிமுகச்செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விநாயகமிஷன் மருத்துவக்கல்லூரியின் புல முதல்வர் குணசேகரன், கல்லூரி தாளாளர் ஆனந்த் கௌரவித்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினர் குணசேகரன் பேசும்போது, செவிலிய மாணவிகள் மருத்துவ துறையில் தங்களின் பங்களிப்பு மற்றும் சேவை மிகவும் அளப்பறியது. மேலும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சுய இரக்க குணநலன்களுடன் எதிர்காலத்தை சிறப்பாக்கி ெகாள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பட்டப்படிப்பு சான்றிதழ்கள் 73 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், கல்வியில் சிறந்த மாணவிகளுக்கு கேடயங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
The post நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.