மன்னார்குடி, மார்ச். 21: பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் விதி எண் 110 இன் கீழ் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் அருள்சங்கு, மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் ராமஜெயம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் பழைய ஊதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். 1.4.2025 முதல் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்றும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் பழைய நிலையிலேயே ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 21வது கால ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் விதி எண் 110 இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த நடப்பு கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.