திருத்துறைப்பூண்டி, மார்ச் 21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புகழ் பெற்ற ஸ்ரீ ராகவேந்திரா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ விஜய வராகி அம்மன் அமைக்கப்பட்டு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. விஜய வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது.
காலையிலிருந்து விஜயவராகிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தீபாராதனையும் நடைபெற்றன. பின்பு அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ விஜயவராகி அம்மனை வணங்கி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ஜெகதீசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post திருத்துறைப்பூண்டி விஜய வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி விழா appeared first on Dinakaran.