விழுப்புரம், மார்ச் 21: விழுப்புரம் அருகே தனியார் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் ஆரம் அபேஸ் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சித்ரா(48). இவர் நேற்று நகை வாங்குவதற்காக விழுப்புரம் வந்துள்ளார். அப்போது 3 பவுன் ஆரம் வாங்கிக்கொண்டு பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பேருந்தில் ஏறி சென்றுள்ளார்.
சித்தலம்பட்டு என்ற இடத்தில் சென்றபோது திடீெரன தான் வைத்திருந்த பையை பார்த்துள்ளார். அதில் 3 பவுன் ஆரம் காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தான் விழுப்புரம் பிள்ளையார்கோயில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றிருந்தபோது அங்கு வந்த 2 பெண்கள் இந்த நகையை திருடிச்சென்றிருக்கலாம் என்று சந்தேகமடைந்து விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விழுப்புரம் அருகே தனியார் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் ஆரம் அபேஸ் appeared first on Dinakaran.