பாளையங்கரை கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா

 

ஜெயங்கொண்டம், மார்ச் 21: அரியலூர் மாவட்டம் பாளையங்கரை கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

அரியலூரில் இருந்து கார்குடி வழியாக பாளையங்களை பூவந்தி கொள்ளை வரை பேருந்து இயக்க வேண்டும். சுத்தமல்லி இரண்டாம் எண் வாய்க்கால் தூர்வார வேண்டும். ஆர் குடியில் பள்ளிக்கூட கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் பாலம் அமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. கிளை செயலாளர் சந்திரசேகர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

The post பாளையங்கரை கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Related Stories: