பொன்னமராவதியில் வெறி நாய் கடித்து ஆடுகள் பலி

 

பொன்னமராவதி, மார்ச்21: பொன்னமராவதி அருகே வெறி நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலியாகியுள்ளன. பொன்னமராவதி அருகே உள்ளகண்டியாநத்தம் சுப்பையா மகன் சொக்கர் 50, விவசாயான இவர் தனது வயலில் ஆடுகளை கட்டி வைத்து இருந்துள்ளார். அப்போது வயலில் யாரும் இல்லாத நேரத்தில், அங்கு இருந்த தெரு நாய்கள் 2 ஆடுகளை கடித்து குதறி உள்ளது. இதில் இரண்டு ஆடுகள் சம்பவ இடத்திலே பலியாயின. இதனால் விவசாயி பெரும்சோகத்தில் உள்ளார்.

 

The post பொன்னமராவதியில் வெறி நாய் கடித்து ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: