திருக்காட்டுப்பள்ளி, மார்ச்21: பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால திருக்காட்டுப்பள்ளியில் சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு உபகோட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி நகர் பிரிவுக்கு உட்பட்ட திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பழுதான மரத்தை அகற்றுவதால் சனிக்கிழமை திருக்காட்டுப்பள்ளி பேருந்துநிலையம், பூதலூர் சாலை, சன்னதி தெரு, மேலவீதி, தெற்குவீதி, காந்திசிலை தெரு மற்றும் மாதாகோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குதலும் பராமரித்தலும் திருவையாறு உதவி செயற்பொறியாளர் கே. ராஜா தெரிவித்துள்ளார்.
The post திருக்காட்டுப்பள்ளியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம் appeared first on Dinakaran.