தஞ்சாவூர், மார்ச்21: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மையப்பகுதியில் அரசுக்கு சொந்தமான உழவர்சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், திருப்பந்துருத்தி, நடுகாவேரி, பள்ளி அக்ரஹாரம், மருங்குளம் வாகரக்கோட்டை, மின்னாத்தூர், வேங்கராயன் உள்ளிட்ட பல்வேறு குடிகாடு, கண்டிதம்பட்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தை விட காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் நேற்று காலை மேலும் காய்கறிகள் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி கத்தரிக்காய் ரூ.20க்கும், மணப்பாறை கத்தரிக்காய் ரூ.36க்கும், புடலங்காய் ரூ.26க்கும், பாகற்காய் ரூ.20க்கும், கொத்தவரங்காய் ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.50க்கும், கேரட் ரூ.40க்கும், தக்காளி ரூ. 16க்கும், உருளைக்கிழங்கு ரூ. 28க்கும் பரங்கிக்காய் ரூ. 16க்கும் பூசணிக்காய் ரூ. 18க்கும், சுரைக்காய் 16க்கும் பச்சை மிளகாய் ரூ.30க்கும் வெண்டைக்காய் ரூ. 36க்கும், முருங்கக்காய் ரூ.50க்கும், மாங்காய் ரூ.50க்கும் விற்கப்பட்டது. உழவர் சந்தைக்கு வந்த பொது மக்கள் விலை குறைவாக இருந்ததால் அதிகளவில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
The post வரத்து அதிகரிப்பால் கணிசமாக குறைந்த காய்கறிகள் விலை appeared first on Dinakaran.