கரூர், மார்ச். 14: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான அலுவலக பிரிவுகள் உள்ளன. நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். மேலும், வாரந்தோறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் மக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டி வளாகம் இல்லாமல் உள்ளது.
இதன் காரணமாக குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வருகிறது. எனவே, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்கள் நலன் கருதி சுத்தமான குடிநீர் கிடைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் appeared first on Dinakaran.