கரூர் மாவட்டத்தில் மீண்டும் வெயில் கொளுத்தியது

 

கரூர், மார்ச் 15: கரூரில் இரண்டு நாட்கள் மழைக்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டத் துவங்கியுள்ளது.  வளிமண்டல சுழற்சி காரணமாக கரூர் மாவட்டத்தில் 11 மற்றும் 12ம்தேதி ஆகிய 2 நாட்கள் கரூர் மாவட்டம் முழுதும் பரவலாக பகல் மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்தது.

மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் அனைத்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் மீண்டும் வெயில் கடந்த 2 நாட்களாக மக்களை வாட்டி வதக்கி வருகிறது. 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் சுட்டெரிப்பதால் முதியோர்கள், சிறுவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post கரூர் மாவட்டத்தில் மீண்டும் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Related Stories: