குளித்தலை, மார்ச் 15: குளித்தலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையிலடைத்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனையடுத்து புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பெரியகருப்பூரைச் சேர்ந்த திருமணம் ஆகாத கூலி தொழிலாளி நடராஜ் (40) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
The post சிறுமிக்கு பாலியல்தொல்லை கூலித்தொழிலாளி போக்சோவில் கைது appeared first on Dinakaran.