கரூர், மார்ச் 18: மண்மங்கலம் வட்டத்தில் நாளை மாவட்ட கலெக்டர் தலைமையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்தில் நாளை (19ம் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக, மண்மங்கலம் வட்டத்தில், வாங்கல் குறுவட்டத்திற்கு, வாங்கல் குறுவட்ட ஆய்வாளர் அலுவலகத்திலும், மண்மங்கலம் குறு வட்டத்திற்கு மண்மங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், தாளப்பட்டி குறுவட்டத்திற்கு, தாளப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் பட்டா மாறுதல் முகாம்கள் நடைபெறவுள்ளது.இந்த முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மண்மங்கலம் வட்டத்தில் நாளை உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் கலெக்டர் தலைமையில் நடக்கிறது appeared first on Dinakaran.